உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் : அ.தி.மு.க., சார்பில் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காந்தியார் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அர்ஜூனன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம்.எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர்கள் ஏழுமலை, அற்புதவேல், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர்கள் தீனதயாளன், பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயன், ரவிவர்மன், ராமதாஸ், விநாயகமூர்த்தி, நடராஜன், சுரேஷ்பாபு, பன்னீர்.வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, ஜெ.,பேரவை நிர்வாகிகள் வடபழனி, ரூபன்ராஜ், குமார், கார்த்திக், விஜயகுமார், சக்திவேல், திருப்பதி பாலாஜி, சக்தி பெரியதம்பி, ரகுநாதன்.மருத்துவர் அணி கோகுலகிருஷ்ணராஜ், முத்தையன், மகளிர் அணி தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், வழக்கறிஞர் ராதிகா, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், வழக்கறிஞர் வீரசம்பத், ஐ.டி., பிரிவு சவுக்கத் அலி, கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை