உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

திண்டிவனம்: முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து நேற்று விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.இதனை கண்டித்து மதியம் 1:30 மணிளவில் திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஜெ.,பேரவை நிர்வாகிகள் ரூபன்ராஜ், வடபழனி, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின் 1:50 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.

செஞ்சி

வல்லம் அடுத்த நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு விநாயகமூர்த்தி, தெற்கு நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பன்னீர் செல்வம், மனோகரன், பாலமுருகன், தமிழ், ஆறுமுகம், விநாயகம், சுரேஷ், புருஷோத்தமன், மணிமாறன், புனிதவள்ளி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் 1:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 1.50 மணியளவில் மறியலை கைவிட்டனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி டோல் கேட்டில் தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன், நகர செயலாளர் பூர்ணராவ் தலைமையில் பேரவைச் செயலாளர் ஜோதிராஜா, நரசிம்மன் உட்பட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பேரை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் வேம்பியில் நடந்த மறியலில் ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமையில் துணை செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை