உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

வானுார் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., வின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அருவாப்பாக்கம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில், முன்னாள் அமைச்சர் சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஜெ., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி ஏழைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சக்கரபாணி எம்.எல்.ஏ., கிளியனுார் ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம், வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், இணைச் செயலாளர் சந்தியா, விழுப்புரம் மண்டல ஐ.டி.,பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ்.மாவட்ட ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் பாலாஜி, விஜய் விக்னேஷ், சங்கர், விமல்ராஜ், ஜெயபால், கஜேந்திரன் ஐ.டி.,பிரிவு ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ஜெகநாதன், தினேஷ், பழனிசாமி, ஸ்ரீதர், பாசறை பாலு, யோகேஷ்.ஒன்றிய நிர்வாகிகள் அறிவழகன், சிவரஞ்சனி, அன்புச்செல்வி, வேல்முருகன், பரத்குமரன், ரமேஷ், குணசேகரன், பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ