உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை

செஞ்சி : செஞ்சியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க திருவண்ணாமலை பஸ் நிறுத்தத்தில் மூன்று லேன்களை உருவாக்கவும், மின் கம்பங்களை நகர்த்தி சாலையை விரிவுபடுத்தவும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். செஞ்சி, திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்று இடையூறாக மின் கம்பங்கள் உள்ளன. அத்துடன் கூட்ரோட்டில் அரசு பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து செஞ்சி பேரூராட்சி நிர்வாகமும், போலீஸ்துறையும் இணைந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜ்குமார் வரவேற்றார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலாஜி, மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பிரபு சங்கர், வி.ஏ.ஓ., ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் செஞ்சி, திருவண்ணாமலை சாலையில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தாமல் இருக்கு முன்று லேன்களை ஏற்படுத்தவும், பஸ் நிறுத்தும் இடங்களை முறையாக பயன்படுத்தவும், மின் கம்பங்கள் நடுவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றி விரைவில் சாலைகளை அகலப்படுத்தவும், காந்தி பஜார், திருவண்ணாமலை சாலையில் சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை ஓர கடைகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ