உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண் திட்ட கலை நிகழ்ச்சி

வேளாண் திட்ட கலை நிகழ்ச்சி

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை, வளத்தி பகுதியில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.ஆத்மா திட்டத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண் அலுவலர் சிவசங்கரி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார்.முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து; மன்னுயிர் காப்போம்' திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், இயந்திரம் மூலம் நெல் நடவு, நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆத்மா திட்ட தலைவர் சம்பத், ஊராட்சி தலைவர்கள் வளத்தி விஜயலட்சுமி ஜெயகுமார், அவலுார்பேட்டை செல்வம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாம்பசிவம், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இதே போல் அவலுார்பேட்டையிலும் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை