உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண்மை ஆய்வுக் கூட்டம்

வேளாண்மை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை நுண்ணுாட்டச்சத்துக்கள், நுண்ணுயிர் பாசனம் மற்றும் உயிர் உரங்கள் பாதுகாப்பு, ஊடுபயிர் விவசாயிகளுக்கான 50 சதவீத மானியம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், நெல் விதை வினியோகம், சிறுதானியங்கள் உற்பத்தி உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, துணை இயக்குநர் சுமதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி