உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பி.எம்., கிசான் உதவித்தொகை பெற தனி அடையாள அட்டை கட்டாயம் வேளாண் துறை அறிவிப்பு

பி.எம்., கிசான் உதவித்தொகை பெற தனி அடையாள அட்டை கட்டாயம் வேளாண் துறை அறிவிப்பு

விழுப்புரம்: பி.எம்., கிசான் உதவித்தொகை பெற தனி அடையாள அட்டை எண் கட்டாயம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்கள் பெற தங்களது நில விவரம், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்க தனி அடையாள அட்டை எண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணியும் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம்., கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,702 விவசாயிகளில் 68,482 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 21,220 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலத்தின் பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களுடன் வேளாண் துறை அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆவணங்கள் சரிபார்த்து விவசாயி ஒப்புதல் பெற்ற பின், செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம்., கிசான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தொடர்ந்து பி.எம்., கிசான் ஊக்கத்தொகை பெற விரைவாக வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும். பி.எம்., கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெற தனி அடையாள எண் வரும் 30ம் தேதிக்குள் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை