உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

வானுார்: கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கிளியனுார் ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். சக்கரபாணி எம்.எல்.ஏ., பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்களிடம் புத்தகங்களை வழங்கி ஆலோசனை வழங்கினர்.நிகழ்ச்சியில், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், மாவட்ட பிரதிநிதி பிரபு, ஒன்றிய பாசறை செயலாளர் சுமன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சந்தியா, அணி செயலாளர்கள் வெங்கடேசன், சீனுவாசன், வேல்முருகன், பாலமுருகன், சந்திரமோகன், அறிவழகன், ஏழுமலை, சிவரஞ்சினி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை