மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆட்சி சாதனை துண்டு பிரசுரம் வழங்கல்
31-Aug-2025
கண்டாச்சிபுரம் கண்டாச்சிபுரத்தில் முகையூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், முகையூர் ஒன்றிய செயலாளர்கள் தனபால்ராஜ், பழனிசாமி, இளங்கோவன் முன்னிலை வகித்தனர். முகையூர் கிழக்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் குமரவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கள்ள குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அ.தி.மு.க ஆட்சியின் சாதனை விளக்கத் துண்டு பிரசுரங்களை வழங்கினார். முகையூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள், திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேருராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் ஏழுமலை, துணைச் செயலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினர்.
31-Aug-2025