உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார்; டி. புதுப்பாளையத்தில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் பலராமன், மாவட்ட பேரவை இணை செயலாளர்கள் முருகன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி வரவேற்றனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் குமரகுரு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று, அ.தி.மு.க., ஆட்சியின் சிறப்பு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ., பேரவை துணைத்தலைவர் முருகதாஸ், திருவெண்ணெய்நல்லுார் நகர செயலாளர் ஸ்ரீதர், திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி, நகர செயலாளர் சுப்பு, பொதுக்குழு உறுப்பினர் மஞ்சுளா ஏசு பாதம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருபானந்தம், மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளர் உதயகுமார், மாவட்ட ஜெ.பேரவை துணைச்செயலாளர் ஐயப்பன், நகர ஜெ.பேரவை செயலாளர் நித்யானந்தம், மாவட்ட ஜெ. பேரவை நிர்வாகிகள் ஏழுமலை ஜெய்சங்கர், குரு என்கிற சரண், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர்கள் ரஞ்சித் குமார், வைத்தியநாதன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ