உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

செஞ்சி : மாற்றுக் கட்சியினர் 15 பேர் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தாதாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. பா.ம.க., நிர்வாகி தலைமையில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கோவிந்தராஜ், நித்திஷ், பிரகாஷ், செஞ்சி 13வது வார்டு அ.தி.மு.க., பொருளாளர் வேல்முருகன் உட்பட 15 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி சுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தி ஏழுமலை, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் திருஞானசம்பந்தம், கிளைச் செயலாளர் சிவப்பிரகாசம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி