உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மரக்காணம் : சட்ட கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் உள்ள அரசு அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் கடந்த 1989ம் ஆண்டு படித்த மாணவர்கள் 35 வருடத்திற்கு பிறகு ஒன்று கூடிய நிகழ்வு மரக்காணம் அடுத்த மஞ்சங்குப்பத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்தது.இதில் 1989 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டனர். தங்களது கல்லுாரி வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் கூறி மகிழ்ச்சியடைந்தனர். விழாவில் அமெரிக்கா, லண்டன், ஆந்திரா பகுதியிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ