உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

அனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

செஞ்சி: அனந்தபுரம்-பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.அனந்தபுரம்-பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் ௨ தேர்வெழுதிய 65 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளி மாணவி அனுஷயா 587 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடமும், மாணவிகள் இளமதி, பிரவினா ஆகியோர் 584 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடமும், மாணவன் பரத் 583 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடமும் பிடித்தனர்.550க்கு மேல் 40 மாணவர்களும், 500க்கு மேல் 23 மாணவர்களும் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 10 மாணவர்களும், வேதியியலில் 14 மாணவர்களும், இயற்பியலில் 1 மாணவரும் 100 மதிப்பெண் பெற்றனர்.முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர்களை தாளாளர் சேகர், பள்ளி முதல்வர் சுஜாதா சேகர் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !