உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க ஆண்டு விழா

நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க ஆண்டு விழா

விழுப்புரம்: தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா நடந்தது.விழாவையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நாட்டுபுற கலைஞர்களின் ஊர்வலம் துவங்கியது. முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், பம்பை உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் உத்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை, மாநிலத் தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.மாநில தலைமை ஆலோசகர் பழனி, மாவட்ட தலைவர் செல்வம், பொருளாளர் மாயவன், செயலாளர் பெருமாள், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை