உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சி: செஞ்சியில் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சைக்கிள் ஊர்வலம் நடந்தது.கல்லுாரி செயலாளர் ஜின்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், டி.எஸ்.பி., கவினா ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தைத் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு கோஷம் எழுப்பிச் சென்றனர்.இன்ஸ்பெக்டர்கள் அப்பாண்டைராஜன், செந்தில்குமார், கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை