உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு சட்டக்கல்லுாரியில் போதை பொருள் ஒழிப்பு பேரணி

 அரசு சட்டக்கல்லுாரியில் போதை பொருள் ஒழிப்பு பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணிக்கு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா தலைமை வகித்தார். கல்லுாரி பேராசிரியர்கள் முரளிதரன், ஜெனிபர், ராமஜெயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் எஸ்.பி., சரவணன் துவங்கி வைத்து பேசுகையில்; ஆரோக்கியமான உணவு பழக்கம் முதலில் வேண்டும். குறித்த நேரத்தில் துாங்குவது அவசியம். ஏ.சி., யில் துாங்குவதால், போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை தேவைகள், உணவுமுறை குறித்து விழிப்புணர்வு அவசியம். உடலுக்கு தீங்கிழைக்கும் போதை பொருள் உட்கொள்வதை தவிர்க்கவும், அதனை தடுக்கவும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்பணியில் மாணவர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து, கல்லுாரி வளாகத்திலிருந்து துவங்கிய பேரணி திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் வழியாக, நான்கு முனை சிக்னல் சந்திப்பு வரை சென்று மீண்டும் கல்லுாரிக்கு திரும்பியது. சட்ட கல்லுாரி மாணவர்கள் போதை ஒழிப்பு தொடர்பாகன விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி