சமுதாய வளப்பயிற்றுநர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம்: சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு சுய உதவிக்குழு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்ய தகுதியான சுய உதவிக்குழு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, www.villupuram.nic.inஎன்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தமிழக மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் கடந்த 17 முதல் வரும் 25ம் தேதி வரை மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. சுயஉதவிக்குழுவில்குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். மொபைல் செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி அதற்கான நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இறுதி தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகை 04146 223736 அல்லது உதவி திட்ட அலுவலரை 9442992115 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.