உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

 மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டி தேர்வில் பங்கேற்கும் பயிற்சி திட்டத்தில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களைத் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் பங்கேற்கும் வகையில் பிரத்யேக பயிற்சி அளிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.inஇணையளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இல்லையேல் விண்ணப்ப படிவங்களை விழுப்புரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக பணி நாட்களில் விலையின்றி பெறலாம். விண்ணப்பதாரர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், 62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமோ அல்லது நேரடியாகவோ வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்