உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் அரசு கல்லுாரியில் தொல்லியல் கருத்தரங்கு

 விழுப்புரம் அரசு கல்லுாரியில் தொல்லியல் கருத்தரங்கு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கல்லுாரியில், தொல்லியல் துறை மற்றும் கல்லுாரி தமிழ் துறை மற்றும் வரலாற்று துறை சார்பில், உலக மரபு வாரத்தை முன்னிட்டு, ஒரு நாள் தொல்லியல் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரங்கநாதன் வரவேற்றார். அரசு தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் லோகநாதன் முன்னிலை வகித்தார். கல்லுாரியில் முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், விழுப்புரம் மாவட்ட தொல்லியல் தடயங்கள் என்னும் தலைப்பில் விளக்கி பேசினார். தமிழக வரலாற்றில், விழுப்புரம் மாவட்டத்தில் காணப்படும் ஏராளமான தொல்லியல் சான்றுகளை படத்துடன் அவர் விளக்கினார். தொல்லியல் அலுவலர் சுரேஷ், தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதன் அவசியத்தையும், வரலாற்றில் அவற்றின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தமிழ் துறை மற்றும் வரலாற்று துறை ஆய்வு மாணவர்கள், முதுகலை, இளங்கலை மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு, தொல்லியல் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ