உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

விழுப்புரம் : திண்டிவனம் அருகே வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் எஸ்.பி., யின், சிறப்பு தனிப்படை போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், நேற்று திண்டிவனம் பகுதியில் ரோந்து சென்றனர், அப்போது, எண்டியூர் கிராமத்தில் வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரேணு மகன் குப்பன், 32; என்பவரை பிடித்தனர். அவர், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 35 மதுபாட்டில்கள், புதுச்சேரி சாராயம் 30 லிட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குப்பனை பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி