உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டணம் ஊராட்சி தொடக்க பள்ளியில் கலைத் திருவிழா

பட்டணம் ஊராட்சி தொடக்க பள்ளியில் கலைத் திருவிழா

திண்டிவனம் : திண்டிவனம், ரோஷணை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது.பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த போட்டிகளுக்கு தலைமையாசிரியர் மேரி புளோரா வரவேற்றார். ஊராட்சி தலைவர் அன்புசேகர், துணைத்தலைவர் கலைச்செல்வி வீரன் போட்டிகளைத் துவக்கி வைத்தனர். போட்டியில் பங்கேற்ற 150 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினராக ஒலக்கூர் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன், குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீமுல்லை, ரோஷணை நகராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி