விழுப்புரம் டி.ஐ.ஜி.,யாக அருளரசு நியமனம்
விழுப்புரம்: விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி.,யாக அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., யாக பணியாற்றிய உமா, சென்னை மேற்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாக பணியாற்றிய அருளரசு, பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒன்பது பேரை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.