| ADDED : பிப் 23, 2024 10:14 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உதவி இயக்குனர் ஆய்வு செயது விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சபியா, பொன்னங்குப்பம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பற்றிய கருத்தையும், குறைகளையும் கேட்டறிந்தார். பின், கொள்முதல் செய்யப்பட்ட நெல் இருப்பு விபரத்தைக் கேட்டறிந்தார்.தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், உதவியாளர் வினாயகம், நேரடி கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சுரேஷ், முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.