மேலும் செய்திகள்
நாமக்கல்லில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி
14-Sep-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு, கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக டாக்டர் எம்.ஜி.ஆர்., உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டிகளை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் விஜயசக்தி தொடங்கி வைத்தார். விழுப்புரம் சரக துணை பதிவாளர் சிவபழனி, பணியாளர் நல அலுவலர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் விக்ரம் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இங்கு நடந்த 100 மீட்டர் ஓட்டம், கபடி, குண்டு எறிதல், கோ-கோ மற்றும் பேட்மிட்டன் போட்டிகளில் 250 பணியாளர்கள் பங்கேற்றனர்.
14-Sep-2025