உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெளிமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: மூவருக்கு வலை

வெளிமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: மூவருக்கு வலை

விழுப்புரம், : விழுப்புரத்தில் வெளிமாநில வாலிபரை தாக்கி, மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கேசாராம் மகன் தீபாராம்,26. இவர், விழுப்புரம் வள்ளலார் நகரில் தங்கி, ஜவுளி கடையில் பணிபுரிகிறார். இவர், நேற்று காலை 10.00 மணிக்கு திருச்சி சாலையில் உள்ள மொத்த ஜவுளி வியாபாரம் கடையில் இருந்து வீட்டிற்கு சென்றார்.அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், தீபாராம் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு தப்பினர். அதில், ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் துணிகள் இருந்தது. அவர், கூச்சலிட்டவுடன், அருகிலிருந்த சிலர் ஓடிவந்து, மூவரையும் பிடிக்க முயன்றும் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ