| ADDED : நவ 25, 2025 04:46 AM
வானுார்: அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வானுார் அடுத்த அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2024 - 25ம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி யில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர். விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் சத்தி ய மூர்த்தி, ஆசிரியர்கள் ஜேம்ஸ் சகாயராஜ், அன்பு மொழி, சவுந்தரவல்லி, தேன்மொழி அமலமேரி, சுபா, நித்யா ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், வானுார் வட்டார கல்வி அலுவலர் கவிதா ஆகி யோரை நேரில் சந்தித்து விருதை வழங்கி பாராட்டு பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.