மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
30-Aug-2024
செஞ்சி : செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தி வரவேற்றார். செஞ்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். தமிழ்த்துறை பேராசிரியர் மான்விழி நன்றி கூறினார்.
30-Aug-2024