மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
26-Oct-2024
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நடந்தது.சிறுதானியங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் விவசாயிகளுக்கு கம்பு மற்றும் கேழ்வரகு செயல் விளக்கத் திடல்கள் அமைக்க விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிரசார வாகனத்தின் மூலம் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயி மத்தியில் ஏற்படுத்தவும், சாகுபடி குறித்தான தொழில் நுட்பங்களை துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கியும், சிறுதானியங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக வானுார் வேளாண் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் உஷா பிரசாரத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர்கள் பஞ்சநாதன், ஜெயலட்சுமி , உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.
26-Oct-2024