உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

திண்டிவனம்: திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நிலையத்தில் இறுதி ஆண்டு மாணவிகள், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு, மொளசூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களிடம் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சுற்றுச்சூழலை ஊக்கு விக்கும் வகையில், கட்டுரை, ஓவிய போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி தலைமையாசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை