மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
15-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அன்னை தெரசா செவிலியர் பயிற்சி மையத்தில், போலீஸ் சார்பில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏ.டி.எஸ்.பி., இளமுருகன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி மைய எண்கள் மற்றும் சட்டம் சார்ந்த பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கராத்தே தற்காப்பு கலை பயிற்சியும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. மொபைல் போன்களில் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து, அதன் பயன்பாடுகள் குறித்து போலீசார் விளக்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
15-Mar-2025