உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மாவட்டத்தில் 30 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மாவட்டத்தில் 30 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

விழுப்புரம் : அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைய மாவட்டத்தில் 30 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலில் நேற்று ராமர் பிரதிஷ்டை விழா நடந்தது. இதன் நேரடி ஒளிபரப்பு காணொலி காட்சி வாயிலாக, தமிழகத்தில் கோவில்களில் வழிபாடுகளுடன் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில், குறிப்பாக கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வழிபாடுகளும் நடந்தது. விழுப்புரம், வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடும், நேரடி ஒளிபரப்பும் நடந்தது. காலை 7:00 மணிக்கு கோபுஜையுடன் துவங்கியது. அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் நடந்தது. 8:00 மணிக்கு ராமர் உற்சவர் வீதியுலா நடந்தது. ஒரு லட்சத்து எட்டு ராமநாமம் வாசிக்கப்பட்டது.மதியம் 12:00 மணிக்கு குழந்தை ராமர் பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பும், 1008 தீப ஒளியும், தீபாராதனையும் நடந்தது. விழுப்புரம் சங்கர மடத்தில், காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை சிறப்பு ராமநாம யாகம், தீபாராதனை வழிபாடும் நடந்தது. விழுப்புரம் செல்லியம்மன் கோவிலிலும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ