உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அயோத்திக்கு சென்று வந்தவர் மரணம்: அமைச்சர் நிதியுதவி

அயோத்திக்கு சென்று வந்தவர் மரணம்: அமைச்சர் நிதியுதவி

திருவெண்ணெய்நல்லுார் : அயோத்திக்கு சென்று வீடு திரும்பும்போது டெல்லியில் உயிரிழந்தவர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தி நிதியுதவி வழங்கினார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பாலகிருஷ்ணன் மகன் நாகராஜ், 57; துணி வியாபாரி. இவர் கடந்த 22ம் தேதி அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவிலில் கும்பாபிேஷக விழாவில் கலந்துகொண்டார்.பின்னர் 23ம் தேதி வீடு திரும்பியபோது டெல்லி சவுக்கி ஹரி நகர் பகுதியில் அதிக குளிர் காரணமாக நாகராஜ்க்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்துள்ளார். இதையெடுத்து நாகராஜ் உடல் அரசு செலவில் ெடல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. மீண்டும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதுபற்றிய தகவலின் பேரில் அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று நாகராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை