உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தடுப்புக் கட்டையில் பைக் மோதி பெண் பலி

தடுப்புக் கட்டையில் பைக் மோதி பெண் பலி

மயிலம் : மயிலம் அருகே சாலை தடுப்புக் கட்டையில் புல்லட் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் மகன் அரவிந்த் கண்ணன், 30; நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி கிருஷ்ணமூர்த்தி மகள் நந்தினி, 28; இருவரும் சென்னையில் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இருவரும் கொடைக்கானலுக்கு பைக்கில் சுற்றுலா சென்று சென்னை திரும்பினர்.நேற்று காலை 5:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார், பைக் மீது உரசியது. இதனால், நிலைகுலைந்த பைக் சாலையின் தடுப்புக் கட்டையில் மோதியது. இதில், பைக் பின்னால் அமர்ந்து வந்த நந்தினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அரவிந்த் கண்ணன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ