உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா,42; இவர், தனது மோட்டார் சைக்கிளை கடந்த 9 ம் தேதி பானாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டு பூட்டி சென்றார். புதுச்சேரிக்கு சென்று விட்டு ராஜா வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. திருடு போனது தெரியவந்தது. இந்த வாகனத்தின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து வாகனத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ