உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் மார்க்கெட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

திண்டிவனம் மார்க்கெட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

திண்டிவனம்: திண்டிவனம் காய்கறி மார்க்கெட்டில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா நடந்தது. அ.தி.மு.க.,மாநில எம்.ஜி.ஆர்.,மன்ற துணைத் தலைவர் ஏழுமலை ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர் தீனதயாளன் தலைமையில் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர்கள் வடபழனி,சக்திவேல், எம்.ஜி.ஆர்.மன்றம் ரவி, மகளிர் அணி தமிழ்ச்செல்வி, ஜெயஸ்ரீ, கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தனன், சரவணன், திருமகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை