உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் கடத்தியவர் கைது

மது பாட்டில் கடத்தியவர் கைது

மயிலம்: புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று புதுச்சேரி -மயிலம் நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.அப்போது, அவ்வழியாக திண்டிவனம் நோக்கி பைக்கில் சென்ற நபரை நிறுத்தி சோதனை செய்த தில் 59 குவார்ட்டர் மதுபாட்டில்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மதுபாட்டில்களை கடத்தி வந்த அரக்கோணம் தாலுகா, காட்டுப்பாக்கம், மேட்டு தெருவை சேர்ந்த நடராஜன்,40; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை