உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூவரசங்குப்பம் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பூவரசங்குப்பம் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

விழுப்புரம் : பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.அதனையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி