உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

 வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

விழுப்புரம்: வளவனுார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். வளவனுார் அடுத்த பனங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 53; பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 4ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரு சென்றவர் கடந்த 16ம் தேதி பனங்குப்பம் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்