உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

 கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், நாராயணா நகர், ஆதிபராசக்தி கோவில் உள்ளது. நேற்று காலை 6:30 மணிக்கு கோவிலுக்கு ஊழியர்கள் வந்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது. தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி