உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : செஞ்சியில் மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.செஞ்சி, மந்தைவெளி அருகேவுள்ள மாரியம்மன் கோவிலை சுற்றி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ஆங்காங்கே பிளாஸ்டிக் பைப்புகள் போடப்பட்டுள்ளன. இதனால் மாட்டு பொங்கலுக்கு மாடுகளை விட இடையூராக உள்ளதாகக் கோரி, அப்பகுதியை சேர்ந்த தினேஷ் தலைமையில் மணிகண்டன், வெற்றிவேல், கோபி, முருகன், ராஜேஷ் உட்பட 40 பேர், நேற்று முன்தினம் மாலை செஞ்சி மந்தைவெளி அருகே மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி