உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : தகராறில் தாய், மகளை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த கீழ்முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ஜெயலட்சுமி, 38; இவரது மாமியார் வீரம்மாள் என்பவரின் இறப்புக்கு, வேல்முருகன் அண்ணன் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் செலவு செய்யாததால் தகராறு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 1ம் தேதி ஜெயலட்சுமி, அவரது மகள் மதுமிதா, 19; ஆகியோரை ஏழுமலை, அவரது மனைவி சந்தானவள்ளி, மகன்கள் ராஜ்குமார், சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.விழுப்புரம் தாலுகா போலீசார் ராஜ்குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை