மேலும் செய்திகள்
பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது
11-May-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்றதற்காக சீல் வைக்கப்பட்ட கடையை விதிமீறி திறந்த கடைக்காரர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் பிரபு, 42; இவர் மந்தக்கரையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் கடந்த ஏப்.7ம் தேதி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார், தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்து பிரபு மீது வழக்கு பதிந்து கடைக்கு சீல் வைத்தனர். பிரபு கடைக்கு வைத்திருந்த சீலை உடைத்து கடையை திறந்துள்ளதாக, விழுப்புரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் போலீசில் புகார் அளித்தார். விழுப்புரம் டவுன் போலீசார் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-May-2025