உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நண்பரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

நண்பரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில், நண்பரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சந்துரு, 23; தனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் மகன் புகழ், 24; என்பவருடன், நேற்று முன்தினம் அதே பகுதியில் மது அருந்தினர். அப்போது புகழ், சந்துருவிடம் பணம் கேட்ட போது பணமில்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த புகழ், சந்துருவை திட்டி தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார் புகழ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை