உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சங்கராபரணி ஆற்றில் ரூ.30 கோடியில் தடுப்பணை

 சங்கராபரணி ஆற்றில் ரூ.30 கோடியில் தடுப்பணை

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, 30 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள தடுப்பணைக்கான பூமி பூஜையை எல்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சக்கரபாணி, ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் நடத்தி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் அருணகிரி உதவி செயற் பொறியாளர்கள் ஐயப்பன், உதவி பொறியாளர் வித்யேஸ்வரன், வி. நெற்குணம் ஊராட்சி தலைவர் செல்வகுமாரி. திமுக., ஒன்றிய செயலாளர் கணேசன், கவுன்சிலர் முத்துக்குமரன், ஊராட்சி தலைவர்கள் மாலதி, லட்சுமி, ராஜாஜி, ஒப்பந்ததாரர் போஜராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ