முதல்வர் திட்ட முகாம் துவக்கம்
விக்கிரவாண்டி,; விக்கிரவாண்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் துவங்கியது. வி சாலையில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், ஒன்றிய துணைச்சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி துணைச் சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். தாசில்தார் செல்வமூர்த்தி வரவேற்றார்.சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்த பிறகு, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, முகாமை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள் விதைகள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், சமூக நல தாசில்தார் வேல்முருகன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், பி.டி ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ., பாபு, உதவி இயக்குனர் ஜெய்சன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், ஒன்றிய தலைவர் முரளி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி, ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி, மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார் வேல்முருகன், கலைச்செல்வன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.