மேலும் செய்திகள்
வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
21-Sep-2025
விழுப்புரம் : விழுப்புரம், வைகுண்டவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாள், சீனுவாச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாலை 5:00 மணிக்கு தீபாராதனையும், சீனுவாச அலங்காரத்தில் பெருமாளுக்கு, சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையும், நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
21-Sep-2025