உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை பொருட்களை ஒழிக்க கூட்டாய்வு நடத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

போதை பொருட்களை ஒழிக்க கூட்டாய்வு நடத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்டத்தில், போதைப்பொருள் விற்பனையை தடுப்பது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடந்த விழிப்புணர்வு பணிகள் குறித்தும், துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், 'கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, விற்பனையினை தடுக்க வேண்டும்.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'டிரக் ப்ரீ டிஎன்' மொபைல் ஆப் குறித்து செயல்முறை விளக்கம் ஏற்படுத்தி, அச்செயலியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.காவல்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு, தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக கூட்டாய்வு செய்து, விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில் எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உட்பட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி