மேலும் செய்திகள்
தொழில்நுட்ப ஆய்வு கூட்டம்
26-Apr-2025
வானுார் : கொந்தமூர், தைலாபுரம் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். வானுார் அருகில் உள்ள கொந்தமூரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ரூ.2.70 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொள்ளும், காளான் வளர்ப்பு திட்டம் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காளான் வளர்ப்பு கால அளவு, பராமரிப்பு செலவினம், வருவாய் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து கேட்டறிந்தார். அதே பகுதியில் தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் ரூ. 4.80 லட்சம் மதிப்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்துள்ள ஆயில் மற்றும் மாவு அரவை மில் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். தைலாபுரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள எள் ரகம் குறித்து கேட்டறிந்தார். மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மோகன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஈஷ்வர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்தி உடனிருந்தனர்.
26-Apr-2025