உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு

 விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில், வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்ததை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில் வரும் 18ம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 2,166 ஓட்டுச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 1,138 அமைவிடங்களில் நேற்று 27 மற்றும் இன்று 28 மற்றும் ஜனவரி 3, 4 தேதிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் நாள் முகாம் நடைபெற்ற இடங்களான விழுப்புரம் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ள தகுதியான வாக்காளர் அனைவரும் முகாம்களில், தங்கள் பகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று தகுந்த படிவங்களை பெற்று பூர்த்திசெய்து நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இவ்வாய்ப்பினைபயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்திட வேண்டும்' என்றார். விக்கிரவாண்டி தாசில்தார் செல்வமூர்த்தி, விழுப்புரம் தாசில்தார் மகாதேவன், விழுப்புரம் நகராட்சி கமிஷனர் வசந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி