வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏன் கோடை காலத்தில் செய்யவில்லை.இப்படி கண்துடைப்பு வேலை செய்து கொள்ளை அடிக்க
மேலும் செய்திகள்
வடகிழக்கு பருவ மழை ஆலோசனை கூட்டம்
18-Oct-2024
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கால்வாய்களை துார் வாரும் பணி நடந்தது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடக்கிறது. கர்ணாவூர் பாட்டைக்குச் செல்லும் ஓடை துார்வாரும் பணியை கலெக்டர் பழனி ஆய்வு செய்து, கழிவுகளை உடனுக்குடன் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்துவதோடு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.காந்தி நகர், வெள்ளவாரி வாய்க்கால், நகராட்சி காம்ப்ளக்ஸ் பகுதிக்கு செல்லும் வாய்க்கால் துார்வாரும் பணியையும் பார்வையிட்டார்.தொடர்ந்து, அவரப்பாக்கத்தில், பெலாக்குப்பம் சாலையில் உள்ள ஏரியில் இருந்து கிடங்கல் 1க்கு உபரிநீர் செல்லும் வாய்க்கால் துார்வாரும் பணி, பட்டணம், பெலாக்குப்பம் செல்லும் சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் தெருவிளக்கு பொருத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார்.சப் கலெக்டர் திவ்யானசு நிகாம், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, கமிஷனர் குமரன், தாசில்தார் சிவா பலர் உடனிருந்தனர்.
ஏன் கோடை காலத்தில் செய்யவில்லை.இப்படி கண்துடைப்பு வேலை செய்து கொள்ளை அடிக்க
18-Oct-2024